Posts

ஓமியோபதி ஆளுமை: மேஜர் தி சா .ராஜு

Image
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவையாற்றை அடுத்த தில்லைஸ்தானத்தில் 1926 ஆகஸ்ட் 15 அன்று பிறந்தவர் மேஜர் ஜெனரல் தி. சா. ராஜு அவர்கள். அப்போது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இவரைத் தில்லைஸ்தானம் சாம்பசிவ ஐயர் ராஜு எனும் தி. சா. ராஜு என்று சொல்லும்போது பெயருக்கான காரணத்தைப்  புரிந்து கொள்ள முடியும்.  எந்திரவியலில் பட்டப்படிப்பை முடித்தவர் ராணுவத்தில் மேஜராகச் சேர்ந்தார். ஏற்கனவே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் அறிந்திருந்த அவருக்கு ராணுவத்தில் சேர்ந்த பின் பஞ்சாபி மொழியும் கைவர அமைந்தது. முதலில் தனது அனுபவங்களை வடநாட்டிலிருந்து எழுதிக் கல்கிக்கு அனுப்பினார். அவை சுற்றுலாத்தலங்கள் பற்றியவையாக அமைந்தன. பின்னர் கலைமகள், கல்கி ஆகியவற்றில் சின்னச் சின்னக் கதைகளை எழுத ஆரம்பித்தார்.  சிறுகதைகள் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து 'காட்டாறு' என்ற ஒரு நாவலை எழுதினார். தனது சிறுகதைகளைத் தொகுத்து 'காட்டு நிலா' என்ற பெயரில் வெளியிட்டார். அதன் பின்னர் எழுதப்பட்ட அனைத்துக் கதைகள் சிறுகதைகளைத் தொகுத்து "பட்டாளக்காரன்" என்று ஒரு நூலாக வெளியிட்டார். அ...